அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து சேவைகள்

பொதுப் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பயணிகளுக்கும் பொருட்களுக்குமான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்