திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு

-கிண்ணியா நிருபர்-

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட செயலகத்தில், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்றது.

இலங்கை சிறுவர் நிதியத்திற்கு, ஜப்பான் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள், சிறுவர் நிதியத்தின் பங்காளரான சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் குச்சவெளி, கோமரங்கடவெல, மொரவெவ பிரதேச செயலக பிரிவை சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டதுடன் , பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சிக்கான காசோலைகளும் மற்றும் சுயதொழிலுக்கான காசோலைகளும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டது.

திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரியரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமவிருந்தினராக திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ,மாவட்ட செயலக ஊழியர்கள், மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், திருகோணமலை மற்று திருகோணமலை வடக்கு கல்வி வலய அதிகாரிகள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்