
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் கையளிப்பு
-கிண்ணியா நிருபர்-
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் நோக்கில் இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது இன்று இரண்டு குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றரை இலட்சம் பெறுமதியான தையல் இயந்திரம் மற்றும் ஒரு குடும்பத்திற்கு மிளகாய் தூள் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கியது.
திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர்கதிரவேலு சண்முகம் குகதாசன் இவ்வுதவிகளை திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
