மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஆர்பாட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைகள் சங்கத்தினரால் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாங்கள் பொருளாதார இக்கட்டான காலகட்டத்தில் போக்குவரத்து கொடுப்பனவுகள் இன்றி நீண்ட தூரத்திற்கு சென்று வேலை செய்கின்றோம்.

எனவே எமது இக்கட்டான நிலமையினை கருத்தில் கொண்டு 7500 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவினை வழங்கி உதவுமாறு கேட்க்கொள்கின்றோம். அத்துடன் வெளிக்களத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவானது எங்களுக்கும் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

எமது கோரிக்கையினை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்