விபசார நிலையம் முற்றுகை: எழுவர் கைது
குருணாகல் மாவட்டத்தில் ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் பெண்ணொருவரால் நடத்தப்பட்டு வந்த விபசார மையம் முற்றுகையிடப்பட்டதுடன் 6 பெண்கள் உட்பட குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை எல்பிட்டிய, நிட்டம்புவ, கடமுலாவ மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்த 25 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுர்வேத மசாஜ் மையத்தில் விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டாலும், அந்த இடத்தில் வைத்தியர் எவருமில்லையென பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாங்கள் கொழும்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக தங்களது பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த இடத்தில் தங்கியிருந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்