தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்

சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

25,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்