சிறைச்சாலை அதிகாரி போதைப்பொருளுடன் கைது

மொரட்டுவை, மொரட்டுமுல்ல பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரியான 26 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மொரட்டுவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்