
வாகன விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு
பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்ற போது பவித்ரா ஜெயராமின் வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் அவர்கள் பயணித்த கார், பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பவித்ராவின் மரணத்துக்கு இரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
