
ஆசிரியர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
பெல்வத்த, பாலம் துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பெல்வத்த பாலம் துனா சந்திக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
