நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்: விமானி பலி

போர்த்துகல் நாட்டின் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு விமானி காயமடைந்துள்ளார்.

விமான சாகச நிகழ்ச்சியின் போது பல இராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் சாகசங்களில் ஈடுபட்டன.

இதன்போது நடுவானில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அடுத்தடுத்து சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், 2 சிறிய விமானங்கள் மோதிக் கொண்டதில் விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தையடுத்து குறித்த விமான சாகச நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்