‘ஈஸ்டர் படுகொலை’ நூல் வெளியீடு
‘ஈஸ்டர் படுகொலை’ நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு எல்லை வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெறுகின்றது
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த நூலை எழுதியுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் இந்த நூலின் ஊடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.