யாத்திரை சென்ற வேன் கோர விபத்து: ஒருவர் பலி

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவரே உயிர் இழந்துள்ளார்.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரை சென்று கொண்டிருந்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் 15 பேர் இருந்ததாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்