5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்
சென்னை – நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியுள்ளது.
குறித்த பூங்காவிற்கு அருகே வசிக்கும் ஒருவரின் வீட்டில் இருந்து வெளியேறிய 2 வளர்ப்பு நாய்கள் பூங்காவுக்குள் நுழைந்துள்ளதுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்து கடித்துள்ளன.
இதனால் குழந்தையின் கைகள், கால்கள் என உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சிறுமி வலியால் துடித்துள்ளார்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு, ஓடிச் சென்ற சிறுமியின் தாய் மற்றும் அயலவர்கள் வளர்ப்பு நாய்களை நீண்ட போராட்டத்துக்கு பின்னர் விரட்டியுள்ளனர்.
பலத்த காயமடைந்த சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை பொலிஸார் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன் குறித்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்