திடீரென சரிந்து விழுந்த பெருமாள்

இந்தியாவில் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பெருமாள் திடிரென சரிந்து விழுந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று புதன் கிழமை இடம்பெற்றது.

இதன்போது கருட சேவை நிகழ்ச்சியில் தண்டு உடைந்து திடீரென பெருமாள் சாய்ந்ததில், அர்ச்சகர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதியில் 17 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்