ஹிங்குராக்கொட விமான நிலைய அபிவிருத்திக்கு அனுமதி

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை முழு வசதியுடன் கூடிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப் படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஹிங்குராக்கொட விமான நிலையம் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான திட்டத்தை தயாரிப்பதற்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்