
ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றும் நபர்கள்: பொலிஸாரின் விசேட நடவடிக்கை
18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளங் காண்பதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பவங்கள் பதிவாகின.
இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் அவர்கள் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
