பிரான்ஸில் தஞ்சம் கோரிய மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில்  சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று திங்கட்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

அவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.