வீட்டில் இருந்தவாறு பொதுமக்களுக்கு வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்

வீட்டில் இருந்தவாறு பொதுமக்களுக்கு வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக சகல அரச நிறுவனங்களினதும் கட்டணம் செலுத்தும் முறைமையை இணைய வழியில் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார்.