பால்மாவின் விலை குறைப்பு

நாளை வியாழக்கிழமை முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ கிராம் எடையுடைய பால்மா பொதி ஒன்றின் விலையை 250 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 400 கிராம் எடையுடைய பால்மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்