
சூதாட்ட மையத்திற்கு சென்ற பாகிஸ்தான் கிரிக்கட் குழாம் உறுப்பினர்கள்?
பாகிஸ்தான் அணியின் நடப்பு ஊடக முகாமையாளர் உமர் பாருக் கல்சன் மற்றும் பணிப்பாளர் சபையின் பொது முகாமையாளர் அத்னாண் அலி ஆகியோர் கொழும்பிலுள்ள கசினோ சூதாட்ட நிலையத்திற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகின்றது.
குறித்த இருவரும் பாகிஸ்தான் அணியின் உத்தியோகப்பூர்வ உறுப்பினர்களாக கொழும்பில் தங்கியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் நெறிமுறைகளுக்கு அமைவாக ஒரு நாட்டின் தேசிய அணியின் குழாமுக்குள் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கசினோ சூதாட்ட மையங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இருவரின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இருவர் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
