பகுதி நேர இலவச கல்வி நிலையம் திறந்து வைப்பு

-தம்பிலுவில் நிருபர்-

அம்பாறை மாவட்ட ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் மக்கள் நலன் காப்பகம் அம்பாறை மாவட்டம் அமைப்பின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு அக்கிராம மாணவர்களின் நலன் கருதி பகுதி நேர கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான நிதி அனுசரனை LOVE N CARE.UK.PWA-UK வழங்கி வைத்தனர்.

இன் நிகழ்வில் கண்ணகிபுரம் கிராம பாடசாலை மாணவர்களுக்கு கற்ற உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இவ் நிகழ்வில் விசேட அதிதிகளாக ஆலையடி வேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருவாளர்.R.சுரேஸ்ராம் மற்றும் கமு/திகோ/கண்ணகி வித்தியாலய அதிபர் திரு.த.இராசநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக தாயக மக்கள் நலன் காப்பக இயக்குனர் திரு.கந்தசாமி, தாயக மக்கள் நலன் காப்பக நிர்வாகப்பணிப்பாளர் திரு.ஜெயராஜ், பொருளாதார உத்தியோதர், மதகுரு, கிராம அபிவிருத்தி சங்கங்கள், மக்கள் நலன் காப்பகத்தின் ஏனைய மாவட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்