ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

-யாழ் நிருபர்-

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமானது.

இன்றையதினம் ஆரம்பமான இந்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்