கிழக்கு தாய்லாந்தில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் பலி
கிழக்கு தாய்லாந்தின் ராயோங் பகுதியில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 200 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ராயோங் மாகாணத்தில் உள்ள மப்டாப்ஹட் தொழிற்துறை துறைமுகத்தில் எரிவாயு சேமிப்பு தொட்டியில் குறித்த தீ விபத்து உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 10:35 மணியளவில் இடம்பெற்றது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், என்று தாய்லாந்தின் தொழிற்பேட்டை ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்