நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

நுவரெலியா ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பன்வில பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்