யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நீலாப்பொல கிராமத்தின் பின்புறமாகவுள்ள காட்டுப் பகுதியில்  இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இச்சம்பவத்தில் நீலாப்பொல கிராமத்தைச் சேர்ந்த டி.டி.சில்வா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூலித்தொழிலிக்காக மணல் ஏற்றுவதற்காக சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணையை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன குறித்த இடத்திற்கு விஜயம் சென்று மேற்கொண்டிருந்தார்.

மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.