காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிக்கஆர சூரியஆர பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவர் தனது சொந்த காணியில் பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதுடன்

மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.