மஸ்கெலியா நகரில் மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர்வேத மருந்தகத்தில், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரைக்கு அமைய, பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ருக்மல் மற்றும் கான்ஸ்டபிள் நவ்ஷாட் ஆகியோர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகள் 851 சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம், நேற்று புதன்கிழமை மாலை 8.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து, குறித்த ஆயுர்வேத மருந்தகம் மஸ்கெலியா நகரில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.