திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட மகமாயப்புரம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை மாலை ஒருவர் கைது செய்யப்பட்டதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் போதை பழக்கம் உடையவர் என்றும், கேரளா கஞ்சாவை உபயோகிக்கும் நோக்கில் அவரது உடமையில் மறைத்தை வைத்திருந்த நிலையில் கைது செய்ததாகவும் துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 420 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர் 34  வயதுடையவர் என்றும் கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் இன்று வியாழக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் துறைமுகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.