சாதாரண தர பரீட்சையில் வழங்கப்படும் இலவச புள்ளிகள் தொடர்பான அறிவிப்பு

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானப் பாடத்திற்கான வினாத்தாளில் காணப்படும் சில வினாக்கள் பாடத்திட்டத்திற்கு அப்பால் காணப்படும் விடயங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2 எம்.சி.கியு (2 MCQ) வினாக்களுக்கு 2 இலவசப் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்