திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை தொடர்பான அறிவிப்பு

ஒரு லட்சத்து 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.