கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

வேதனம் அதிகரிக்கப்படாமை, பதவி உயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று திங்கட் கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு, அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலும் இதன்போதும் எவ்வித தீர்வுகளும் முன்வைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்