“போர் வேண்டாம், பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்” – ஓஸ்கார் மேடையில் ஒலித்த குரல்!

சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது வழங்கும் மேடையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம், “போர் வேண்டாம், பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்” (No to war, free Palestine) என முழக்கமிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

2025ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவிக்கும் 98ஆவது அகாடமி விருது (Oscars) வழங்கும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, ஹொலிவூட்டில் உள்ள டொல்பை தியேட்டரில் (Dolby Theatre) நடைபெற்றது.

இதன்போது நடிகர் ஜேவியர் பார்டெம், தனது உடையில் “போர் வேண்டாம்” (No to war) என்ற வாசகம் அடங்கிய பின் (Pin) மற்றும் பாலஸ்தீன எதிர்ப்பின் அடையாளமான “ஹண்டாலா” (Handala) சின்னத்தையும் அணிந்திருந்தார்.