‘உழைப்பதற்கு தடையேதுமில்லை’ மாற்றுத்திறனாளியின் வெற்றிக்கதை

-கிண்ணியா நிருபர்-

உடலில் உள்ள குறைபாடு என்பது ஒரு மனிதனை முடக்கி விடாது என்று நிருபித்துள்ளார் சுந்தரராஜன்.

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் ஒரு மாற்றுத் திறனாளி. 

இவர் தனது உடலில் இருக்கும் குறையை உழைப்பிற்கு ஒரு தடையாக நினைத்ததேயில்லை.
இவர் அங்கவீனர்களை தொழிலில் இணைத்தல் எனும் வேலைத் திட்டத்துக்கு அமைவாக திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவைகள் திணைக்களமும் தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தரின் ஒருங்கணைப்பில் தொழிலில் இணைக்கப்பட்டார்.

தற்போது சுந்தரராஜன் தம்பலகாமத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.