மரக்கறி விலை வீழ்ச்சி : வியாபாரிகள் கவலை தெரிவிப்பு

-யாழ் நிருபர்-

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளது இதனால் வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி சந்தையின் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

ஒரு கிலோ கரட் – 70ரூபா,  உருளைக்கிழங்கு – 120ரூபா, கத்தரி – 200ரூபா,  நீர்த்தேக்காய் – 80ரூபா,  வாழைக்காய் – 150ரூபா,  கருணைக்கிழங்கு – 80ரூபா,  கீரை – 50ரூபா,  உருளைக்கிழங்கு – 120ரூபா  போன்ற   விலைக்கு விற்பதால் வியாபாரத்தில் இலாபம் ஈட்ட முடியவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

அத்துடன் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏனைய தொழில் துறையும் பாதிக்கப்பட்டதன் விளைவும் வியாபாரம் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்தனர்.