திருகோணமலையில் அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் கூட்டம் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
இதில் தலைவர் துணைத்தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட்ட 15 நிர்வாக உறுப்பினர் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர் பங்குபற்றினர்.
இக்கூட்டத்தில் முதன்மையாக கலந்து கொண்ட மன்றத்தின் ஆலோசகர் மற்றும் அறிவு ஒளி மைய நிறுவனர் அஜித்குமார் உதயகுமார் அவர்கள் பேசுகையில் எதிர்கால திட்டம் மற்றும் மாணவர்களின் அபிவிருத்திக்கான சில திட்டங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையில் செயல்படும் விதங்கள் அனைத்தும் கூறினார்.
முத்தமிழ் மாணவர் மன்றத் தலைவர் மாதவராசா டிலக்ஷிகா துணைத்தலைவர்கள் செந்தூரன் வர்ஷன், சாந்திஸ்வரன் டிலுசியா மற்றும் ச. லுகேஷ் ஆகியோர் மாணவர் மன்றம் செயற்படும் விதம் மற்றும் அதில் உள்ள நிரைகுறைகளை நிவர்த்தி செய்ய தேவையான வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடினர்.
பொருளாளர் தினேஷ்குமார் சாத்விகா மற்றும் பொதுச் செயலாளர் இளங்கோவன் ரிஷிகவி ஆகியோர் மாணவர் மன்றத்தின் சந்தாப் பணம் மற்றும் அதனை கையாலுகை செய்யப் பட வேண்டிய விதம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்