தினியாவல, மஹவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை இரவு கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தனது கணவருடன் வசித்து வந்த பெண், திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக குறித்த நபரால் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக டிசம்பர் 30 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
குறித்த பெண் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது கணவர் வீட்டிற்கு வந்து அவரை தாக்கி இறுதியில் கழுத்தை அறுத்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹினிதும, ஹிங்கல்கொட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர், ஹினிதும பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -