மோட்டார் சைக்கிள் – டிப்பர் மோதி விபத்து: இருவர் காயம்

வெல்லவாய பகுதியில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஹவுங்கம பிரதேசத்தில் இருந்து கரந்தகொல்ல பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பயணித்த தாய் (வயது – 49) மற்றும் மகன் (வயது – 18) ஆகியோர் படுகாயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காயம் அடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்