
யானை தாக்கி 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
சம்மாந்துறை பிரதேசத்தில் நெய்னாகாடு வம்பியடி எனும் இடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறக்காமம் 9ஆம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான புஹாரி சரீப் சிபானி (43 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
