பிரான்ஸ் நாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று, விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் 100ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றினார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமலி கொத்தலாவல உள்ளிட்ட குழுவினரும் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
உலக விலங்கு சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் Hugo Idoyaga Benitez அழைப்பின் பேரில், அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்