மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொழிலாளர் தின நடைபவனி

“விழிப்படைவார் தொழிலாளர் – விடியும் தேசம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொழிலாளர் தின நடைபவனி இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இப்பேரணி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் இல்லத்தில் இருந்து ஆரம்பமாகி பெரிய கல்லாறு பிள்ளையார் ஆலய முன்றல் வரை சென்றது

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்னெடுத்து சென்ற இந்த பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.