மின்னல் தாக்கியதில் வைத்தியசாலையில் பாரிய பாதிப்பு
மின்னல் தாக்கியதில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மழை பெய்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியவில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் விசேட சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் இருந்த நிலையில் அவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மின்னல் தாக்கத்தினால் விசேட சிகிச்சைப் பிரிவிலிருந்த பெறுமதியான வைத்திய உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 100 இலட்சம் ரூபா இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்