
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக நேற்று வியாழக்கிழமை காலை பொலிஸாரால் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1000 மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
