-அம்பாறை நிருபர்-
மனித குடியேற்றத்திற்கு அருகாமையில், பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில், சாய்ந்தமருது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுற்றுச்சூழல் பிரிவிற்கு பொறுப்பான சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரி மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன் போது, பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்து வந்த நபருக்கு எதிராக பொதுமக்கள் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.








