
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கையின்படி இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணி முதல் நாளை திங்கட் கிழமை அதிகாலை 3 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 2 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
