கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெரிய பளை பகுதியைச் சேர்ந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவரே நேற்று சனிக்கிழமை காணாமல் போயுள்ள நிலையில் , இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.