தனது ஓய்வை அறிவித்தார் ஜோன் சீனா

மல்யுத்த வீரரான ஜோன் சீனா தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மல்யுத்தம் போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக ஜோன் சீனா அறிவித்துள்ளார்.

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க இரசிகர்களை கொண்டவர் ஜோன் சீனா .

இவர் இதுவரையில் 16 முறை WWE சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்