பெண்ணின் இடுப்பின் கீழ் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை தடை செய்ய ஜப்பான் முடிவு
ஒரு பெண்ணின் இடுப்பின் கீழ் அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை முற்றாக தடை செய்ய ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
“ஃபோட்டோ வோயரிஸம்” க்கு எதிரான மசோதா, பாலியல் செயல்களை அனுமதியின்றி படமாக்குவதையும் தடைசெய்யவுள்ளது.
ஒருவரின் பிறப்புறுப்புகளை அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது, இதை விநியோகிப்பது அல்லது வைத்திருப்பதை இந்த சட்டம் வெளிப்படையாகத் தடை செய்கிறது.
2021 ஆம் ஆண்டில், ஜப்பானிய காவல்துறை 5,000 ற்கும் மேற்பட்டவர்களை இரகசிய புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்தது இது 2010துடன் ஒப்பிடும் போது விட மூன்று மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய சட்டம் ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய சட்டங்களை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது மூன்று மில்லியன் ஜப்பானிய யென் வரை அபராதம் விதிக்கப்படும்.
சமூகப் பழமைவாத நாட்டில் சீர்திருத்தத்திற்கான இளைய ஜப்பானியப் பெண்களின் அழுத்தத்தின் மத்தியில் “ஃபோட்டோ வயோயூரிசம்” மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை வந்துள்ளது.
பாலின சமத்துவப் பிரச்சினைகளில் ஜப்பானின் கலாச்சாரம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதியை விட குறைவாக உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2020 உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீட்டில் 153 நாடுகளின் பட்டியலில் 121வது இடத்தை ஐப்பான் பிடித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்