
வட்டு இந்துவின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும்
யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பு விழாவும் இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் திறந்தவெளி முத்து அரங்கில் நடைபெற்றது.
தேசியக்கொடி மற்றும் கல்லூரிக் கொடி ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது. அதன்பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகளும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
இறுதியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
கல்லூரியின் அதிபர் அ.ஆனந்தராஜா தலைமை தாங்கிய இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருமதி ஜென்சி திலீபன் (செயற்பாட்டு பொறியியலாளர் – இலங்கை மின்சார நிலையம் – சுன்னாகம்) சிறப்பு அதிதியாக திரு. சிவசம்பு மதியழகன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் – வலிகாமம் கல்வி வலயம்) , கௌரவ விருந்தினர்களாக லயன் மாணிக்கம் தவக்குமார் ( தலைவர் – ஆன்மீக அறக்கட்டளை) , திருமதி சரஸ்வதி பாலசுந்தரம் (முன்னாள் பிரதி அதிபர் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்லூரியின் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.





