யாழில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகு விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

மேலும், காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

……………………………………………………………………….

யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை பாலைதீவுக்கு சென்ற ரோலர் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் படகை ஓட்டிச் சென்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கியவர்களில் 04 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது