யாழ் விபத்தில் இரு பெண்கள் பலி நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

6 பேர் காரில் பயணித்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்